அங்கீகரிக்கப்படாத மனைகளை வரும் 03.11.2017-க்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் பொருட்டு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண்.78, நாள். 04.05.2017– ல் தெரிவித்துள்ளபடி 20.10.2016 -க்கு முன்னர் பத்திரபதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் (அ) மனைகிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டுமென கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்களை உரிய ஆவணங்களுடன் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் வழியாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல் அவசியமானதாகும். ஆகவே, அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்கள் 03.11.2017 தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேற்படி பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் மற்றும் மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை/உள்ளுர் திட்டகுழுமத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தனிப்பட்ட மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பித்து மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனைகளை வரைமுறைப்படுத்தும் மேற்படி திட்டதின் கீழ் வரைமுறைப்படுத்திய மனைகளுக்கு மட்டுமே எதிர்காலங்களில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் பெற்றுக் கொள்ள இயலும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாநகராட்சியில் 5 மண்டல அலுவலகங்களையும், பிரதான அலுவலகத்தையும் மற்றும் கோயம்புத்தூர் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்தையும் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...