குடிமைப்பணிக்கான முதனிலை தேர்வு தொடர்பான முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை (18.06.2017) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் (Preliminary) தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான முன்னனேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில், கோவை மாவட்ட UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் / தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் முன்னிலையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22 மையங்களில் மொத்தம் 8755 நபர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இந்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இத்தேர்வுகள் இருப்பதால் அனைத்து அலுவலர்கள் கவனமுடன் பணியாற்றிட வேண்டும். அனைத்து தேர்வாளர்களும் கண்டிப்பாக கணிப்பான், அலைப்பேசி போன்ற எவ்வித மின்னனு உபகரணங்கள் எடுத்து வரக்கூடாது. தேர்வறை கண்காணிபாளர்கள் இதை உறுதி செய்திடல் வேண்டும். காவலர்கள் போதிய அளவில் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற எண்களிலோ தேர்வாளர்கள், தேர்வு நடத்துவர்கள், அலுவலர்கள் தொடர்பு கொள்ளலாம். கடந்த முறைபோலவே எவ்வித சிரமங்களின்றி அனைவரும் சிறப்பான முறையில் பணியற்றிட வேண்டும்.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் / தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...