சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம்

கோவை மாநகரில், காந்திபுரம் பகுதியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு அலுவலகத்தின் மீது மதவெறிகொண்ட, சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயக பூர்வமான விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற, சங்பரிவாரக் கும்பல்களின் வன்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கும் நடவடிக்கையில் ஒரு பிரிவு மதவெறிக் கும்பல் ஈடுபட்டதையும், மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அலுவலர்கள், பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை சகித்து கொள்ள முடியாத, சமூக விரோதக் கும்பல் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியுள்ளது. பசுக் காவலர்கள், காதலர் கண்காணிப்புக் குழுக்கள், மதக் காவலர்கள் என்ற பெயர்களில் செயல்படும் வன்முறைக் கும்பல்களுக்கு ஆதரவுகாட்டும் மோடி அரசின் கொள்கைகள் வன்செயல்கள் அதிகரிக்க காரணமாகும். 

தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து, கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள், சமூக நல்லிணக்கம் காப்போர், அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...