நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு


கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் பொறியாளர் மற்றும் கட்டிடம் சர்வேயர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கனகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 75, கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 



இப்பகுதியில், நீர்நிலை இருந்ததற்கான சான்றாக மாவட்ட நிர்வாகம் ஆவண எண் 149/2பி குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பில் எண் 10 கட்டிடமே இந்த நீர்நிலையினை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் ஒரு வணிக வளாகமும் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் ஒரு நீர்நிலையே மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கனகசுந்தரம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...