உணவு பொருள் மீது ஜிஎஸ்டி வரியை அதிகரித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை அதிகப் படித்திய மத்திய அரசைக் கணடித்து வணிகர் சங்கத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில், சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகிதம் வரியும், நடுத்தர ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிப்பும், ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.

முந்தைய காலத்தைவிட கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்தவரி விதிப்பால், உணவகங்களுக்கு வரும் பொது மக்களை பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடியிருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல தமிழகம் முழுவதும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணையத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே வரி என்கின்ற முறையில் மாறுதல் செய்து வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 300 ரெஸ்டாரண்டுகளும், 1200 பேக்கரிகளும், பல ஆயிரக்கணக்கான மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தமாதம் மீண்டும் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...