மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றம்

கோவை மாவட்டம், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு திங்கட்கிழமை (இன்று) காலை 11 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் இச்சேவையை துவக்கி வைத்தார்.

நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தேசிய தகவல் மைய தகவல் அலுவலர் ரவிக்குமார், உதவி தகவல் அலுவலர் வெங்கடேஷ், பராமரிப்பு ஆய்வாளர்கள் தவமணி, அயூப்ஜான், கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் (பொறுப்பு) முத்துராஜா, கண்காணிப்பாளர் மோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ், வட்டத்துணை ஆய்வாளர் சிவகுருநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் இதர உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...