News
கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
SimpliCity News Team · 22 hours ago
Coimbatore: கோவை ராமநாதபுரம் பகுதியில் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக உரிமையாளர்கள் யாரும் இல்லாமல் கேட்பாரற்ற நிலையில் 10 இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்களிடம் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அந்த வாகனங்களுக்கு உரிமை கோரி யாரும் முன்வரவில்லை.
இதை அடுத்து 10 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் திருடப்பட்டவையா அல்லது ஏதேனும் குற்றச் செயல்களுக்காகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவையா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related stories
News
Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims
15 days ago
News
Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition
16 days ago
News
Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition
17 days ago
News
Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi
18 days ago
News
Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting
19 days ago
News
Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day
25 days ago