கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலின்போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமிக்கும் காயம் ஏற்பட்டதால், காவல்துறை பாதுகாப்புடன் தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே வெள்ளிமலைப்பட்டிணம் தெற்கு வீதியில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிமலைப்பட்டிணத்தைச் சேர்ந்த நாகராஜுக்கும் (62), அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கந்தசாமிக்கும் (61) இன்று (28.08.2026) காலை சுமார் 6 மணியளவில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, கந்தசாமி நாகராஜை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.



இதில் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமிக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார், நாகராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் தொடர்பாக எழுந்த பிரச்னையில் கந்தசாமி இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நாகராஜ் திமுக கிளை பிரதிநிதியாகவும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி முன்னாள் திமுக கிளை அவைத்தலைவராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக கோவையில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்குள் மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...