கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் முன்வைக்கலாம்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (25.08.2026) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை பிரச்சினைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மேயரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.
மேலும், தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி தொடர்பான விவகாரங்கள், புதிய குடிநீர் இணைப்பு கோரிக்கைகள், பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இக்கூட்டத்தில் தீர்வு காணலாம். மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.