கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை நவக்கரையில் அமைந்துள்ళ ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "தெய்தகா" என்ற கருப்பொருளில் ஓணம் கொண்டாட்டம் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆகஸ்ட் 20-ம் தேதி சிறப்பாக நடத்தப்பட்டது.



"போதைப்பொருளுக்கு 'இல்லை' என்று சொல்லுங்கள்; ஓணம் சத்யாவுக்கு 'ஆம்' என்று சொல்லுங்கள்" என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பதாகையை மகாபலி மன்னன் வெளியிட, ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவனர் Dr அஜித்குமார் லால் மோகன் பெற்றுக்கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.



மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தினர். பஞ்ச வாத்தியம், செண்ட மேளம், சிங்காரி மேளம், தம்போலம், நாசிக் டோல், ஜமாப், பாண்டி மேளம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளுடன் மகாபலி மன்னனை முன்னிலைப்படுத்தி நவக்கரையிலிருந்து கல்லூரி வளாகம் வரை பேரணி சிறப்பாக நடைபெற்றது.



மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் 40 கிலோ பூக்களால் மாணவர்கள் அமைத்த பிரமாண்ட பூக்கோலம் கல்லூரி வளாகத்தை அலங்கரித்தது. ஓணம் விழாவின் ஒரு பகுதியாக பூக்கோலம், கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன. திருவாதிரை நடனம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களால் அழகாக நிகழ்த்தப்பட்டன.

அடப்பிரதமன், முக்கனி பாயாசம், சேமியா பாயாசம், நாவல் பழ பாயாசம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாயாசங்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பூக்காவடி மற்றும் கதகளி நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. மாணவிகள் கேரள பாரம்பரிய கசவு ஆடைகளை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பம்சமாக 25 வகையான உணவுப்பொருட்களுடன் ஓணம் சத்யா தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த சத்யாவை மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.



விழாவில் பேசிய Dr அஜித்குமார் லால் மோகன், ஓணம் பண்டிகையின் அடிப்படையான ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுடன் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வும் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என வாழ்த்தினார். இளைஞர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விழா மாணவர்களிடையே கேரள பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதோடு, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகமும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பு,...