கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாணவிகள் மூலம் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் பொறுப்பான சாலைப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
Coimbatore: கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் உயிர் அமைப்பின் கல்விப் பிரிவு வழிகாட்டுநரும், LMW நிறுவனத்தின் நிர்வாகத் துறை தலைவருமான Captain R Satish ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் LMW நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் விருந்தோம்பல் பிரிவு பொது மேலாளர் பிரவீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியில் ஏற்கனவே உயிர் அமைப்பின் சாலை பாதுகாப்பு மாணவர் குழு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாணவிகள் பொறுப்பான சாலைப் பயன்பாடு மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் மூலம் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
மாணவிகளிடம் பேசிய Captain R Satish, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றார். 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கோவையில் சாலை விபத்துகளில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் கணிசமானோர் அப்பாவி பாதசாரிகள் என்றும் தெரிவித்தார்.
மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகளை முதலில் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உயிர் அமைப்பின் வள நபர் சாலைப் பாதுகாப்பு, பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான சாலைப் பயன்பாடு குறித்து விளக்கினார். இந்த கூட்டு முயற்சியின் மூலம் கோவையில் சாலை விபத்துகளை குறைப்பதற்கான விழிப்புணர்வு பரவலாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.