ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 19 அன்று கையெழுத்தானது. கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், நிதியுதவி முயற்சிகள் இதன் முக்கிய நோக்கங்களாகும்.


Coimbatore: கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் அங்கமான ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி (SRIT) மற்றும் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Palakkad) இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஆகஸ்ட் 19 அன்று காலை 10 மணியளவில் IIT பாலக்காடு நிலா வளாகத்தில் சிறப்பாகக் கையெழுத்தானது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்விப் புதுமைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவை உருவாக்குகிறது.

IIT பாலக்காடு தரப்பில் தொழிற்துறை மற்றும் நிதி ஆராய்ச்சித் தலைவர் Dr. அரவிந்த் அஜய், நிர்வாகப் புல முதன்மையர் Dr. பிபுரஞ்சன் சாரங்கி மற்றும் மின் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் Dr. சுக்கோமல் டே ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி தரப்பில் முதல்வர் Dr. ஜெ. டேவிட் ரத்னராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாக கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி புதுமைச் சிந்தனை மற்றும் அறிவுப் பரிமாற்றம், ஆராய்ச்சி நிதியுதவி ஆகியவை அடங்கும். அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ள வழிவகை செய்யும்.

மேலும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவிகளை இணைந்து பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் எதிர்காலத் தொழில்நுட்ப ஆராய்ச்சி விரிவடைவதுடன், மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும் என இரு தரப்பினரும் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

இந்த கூட்டுறவு கோவை மாவட்டத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...