கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2024 முதல் 2026 மார்ச் வரையிலான மீட்பு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.


Coimbatore: இந்திய அரசின் சார்பில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு கோவை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.

நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு இந்திய அரசு ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது.


மூன்று வகை விருதுகள்




சர்வோட்டம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜீவன் ரக்‌ஷா பதக்கம் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை




2026-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் 2024ம் ஆண்டு முதல் 31.03.2026 வரை இரண்டு வருடங்களில் ஆற்றிய பணிகளுக்கு வரவேற்கப்படுகின்றன.

விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் www.awards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10.08.2026 மாலை 4.00 மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...