மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுத்து வரும் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 17 வயது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகக் கூறி மிரட்டி, ரூ.8.65 லட்சம் பறித்ததாக குற்றம்சாட்டி, அப்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தங்களது வீட்டின் அருகே அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்த துஷரா என்பவர் தங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது 17 வயது மகளுடன் ‘கார்த்திக்’ என்பவர் தொடர்பில் இருப்பதாகவும், அவரிடம் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை நீக்க ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என துஷரா தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் பெற்றும், கூகுள் பே மற்றும் ரொக்கமாக பல தவணைகளில் மொத்தம் ரூ.8.65 லட்சம் வழங்கியதாகவும், அந்த தொகை துஷரா மற்றும் அவர் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் ‘கார்த்திக்’ என்பவரிடம் கொடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், துஷரா பொய்யான தகவல்களை கூறி பணம் பறித்தது தெரியவந்ததாகவும், பணத்தை திரும்பக் கேட்டபோதும், காவல்துறையில் புகார் அளிக்க முயன்றபோதும், துஷரா மற்றும் கார்த்திக் இருவரும் தொடர்ந்து மிரட்டியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாத சிலரை வைத்து தங்களது குடும்பத்தினரின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே சென்றாலோ, வழக்கறிஞர் அல்லது காவல்துறை அதிகாரிகளை சந்திக்கச் சென்றாலோ, தங்களை பின்தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை வெளியில் தெரிவித்தாலோ அல்லது காவல்துறையில் புகார் அளித்தாலோ, குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்றும், தன்னையும் தனது குழந்தைகளையும் உயிருடன் விடமாட்டோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, புகாரை ஏற்க மறுத்ததாகவும், பின்னர் ஜூன் 29-ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆன்லைன் மூலம் புகார் அளித்ததற்கான ரசீது வழங்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணையோ நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, துஷரா, ‘கார்த்திக்’ எனக் கூறப்படும் நபர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது குடும்பத்தினருக்கு காவல் பாதுகாப்பு வழங்குவதுடன், மிரட்டி பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.65 லட்சத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...