கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை:

கோவையில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு மொத்தம் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மரவெட்டுக்கு எதிராக வருவாய்த் துறையினர் எடுத்துள்ள இந்த கடுமையான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை வெரைட்டி ஹால் பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர், தனது இடத்தின் முன்புறம் உள்ள பொது இடத்தில் வளர்ந்திருந்த புங்கை மரத்தை கடந்த ஜூலை 10-ஆம் தேதி அரசு அனுமதியின்றி வெட்டியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து Green Care அமைப்பினரும் அப்பகுதி மக்களும் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா, சங்கர்லாலுக்கு ரூ.1,06,400 அபராதம் விதித்ததுடன், அவரது இடத்தில் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், குனியமுத்தூர் பகுதியில் ஐந்து மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றிருந்த நிலையில், அனுமதியை மீறி மரங்களின் பெரும்பகுதியை வெட்டியதாகக் கூறப்படும் தனியார் கடை உரிமையாளருக்கு பேரூர் வட்டாட்சியர் ரூ.1,04,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.



இதுவரை அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்களுக்கு குறைந்த அளவிலான அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை அதிக தொகை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த அபராதம் விதிக்கப்பட்டால் அதை செலுத்திவிட்டு மீண்டும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், கடுமையான அபராதம்தான் மரவெட்டுகளை கட்டுப்படுத்துவதில் பயனளிக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து Green Care அமைப்பின் நிறுவனர் சையது கூறுகையில், அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டால் தான்இதுபோன்ற விதிமீறல்கள் குறையும் என்றார். மேலும், பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...