கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 12 துறைகள் பங்கேற்று 3963 பணியாளர்கள் பலன் பெற்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இந்த முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலை வகித்தார்.

இன்று காலை 10 மணி முதல் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் வருவாய்த்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி நிருவனம், பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



பங்கேற்ற துறை அலுவலர்கள் தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் ESI, PF தொடர்பாகவும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் 3963 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்துகொண்ட பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), வே.கதிர்வேல் (வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), சுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ஆண்டியப்பன், குணசேகரன், ராஜேந்திரன், உதவி பொறியாளர் மஞ்சுளா தேவி, சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், விஜயகுமார், சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...