கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27ல் பல்வேறு பொதுநல பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

முதலில் பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் முழு நேர கிளை நூலகத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் வருகை பதிவேட்டை விரிவாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நூலக ஊழியர்களும் உடன் இருந்தனர். நூலகம் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை வழங்குகிறதா என்பதை உறுதி செய்தார்.



அடுத்து, பீளமேடு குறும்பர் வீதி பகுதியில் ஏர் கம்ப்ரசர் லாரி மூலம் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று கண்காணித்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார். பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், பீளமேடு தூக்கினார் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதையும் கவுன்சிலர் ஆய்வு செய்தார். சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரியும் உடன் இருந்தார்.



பொதுமக்கள் சுத்தமான சூழலில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து பணிகளும் விரைவாக நிறைவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...