துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: துணை குடியரசுத் தலைவர் கோவை மாநகரத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன், உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிற்றா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு ஜூலை 21ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 23ஆம் தேதி காலை 11 மணி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தடை உத்தரவை மீறி ட்ரோன்இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...