தமிழக அரசின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் உடல்நலம் குறித்த பரிசோதனை கூட்டம்

அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக் கூடிய வகையில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை  “முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்” என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சரால் கடந்த 2012 ஜனவரி 11ம் தேதியன்று துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இதுவரை 1.58 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 17.30 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.3398.66 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் சிறப்பு அறுவை சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் தொகுப்பு நிதி ஒன்று அரசால் உருவாக்கப்பட்டு மேற்கண்ட உயர் சிறப்பு அறுவை சிகிச்சையை கட்டணமில்லாமல் செய்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1027 வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 154 சிறப்பு சிகிச்சை முறைகளும் (2 லட்சம் காப்பீட்டு தொகை) 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 38 முழுமையான பரிசோதனை முறைகளும் 154 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும்.

சிறப்பு உயர் சிகிச்சைகளாக இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, சேவிப் புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை ஆகியன புதிய திட்டத்தில் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை 4695 பயனாளிகள் 332.95 கோடி ரூபாய் செலவில் உயர் சிறப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்படும் உயர் சிறப்பு அறுவை சிகிச்சை பயனாளிகளுக்கு இச்சிகிச்சசைகள் பயனுள்ளதாக உள்ளதா? மற்றும் அறுவை சிகிச்சசைக்கு பிறகு உடல் நலம் நன்றாக உள்ளதா? என்பதை கண்காணிக்கும் பொருட்டு இந்த கூட்டம் தமிழக முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, மதுரை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு முறையே 600 (மாவட்டங்கள் - 13), 462 (மாவட்டங்கள்-5) மற்றும் 534 (மாவட்டங்கள் -6) பயனாளிகள் பரிசோதிக்கப்படடுள்ளனர்.

தற்போது கோவை அருகிலுள்ள 8 மாவட்டங்களில் முதலமைச்சரின் வரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு சிகிச்சைப்பெற்ற 622 பயனாளிகள் சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளனரா? என பரிசோதிக்கப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட பரிசோதனைகளின் முடிவின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது நாள் வரை 2733 காக்ளியர் இம்பிளாண்ட், 1463 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சசைகள், 346 ரத்த அணுக்கள் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 218 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஓஏஇ என்னும் பரிசோதனையின் மூலம் காதுகேளாமை விரைவில் கண்டறியப்பட்டு காதுகேளாமை மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...