தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முகாம் நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதீனங்களுக்கு சொந்தமான கோயில் யானைகளுக்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் மீண்டும் முகாமை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, யானைகள் கட்டி வைக்கப்படும் பகுதிகள், பாகன்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம், தீவனங்கள் சேமிக்கும் அறைகள், பவானி ஆற்றில் யானைகள் குளிக்கும் இடங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள் மற்றும் ஷவர் குளியல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.



மேலும், வனத்துறையினரின் உதவியுடன் வனவிலங்குகள் முகாமிற்குள் நுழையாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சோலார் மின்வேலி அமைப்பது, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க ஏற்ற இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்வின்போது வனபத்ரகாளியம்மன் கோயில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான சரவணன் (கூடுதல் பொறுப்பு), கோவை கோட்ட பொறியாளர் ரேவதி, உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல், கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், தனராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் சரக ஆய்வர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கடைசியாக, 2021-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதுவரை முதுமலை தெப்பக்காட்டில் இரண்டு முறையும், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 11 முறையும் என மொத்தம் 13 முறை யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...