கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முதியோர்களை மதித்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


Coimbatore: முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமான ஜூன் 15 அன்று கோவை மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு உறுதிமொழி எடுக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் எடுக்க வேண்டிய முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இவ்வாறு அமைந்துள்ளது: "இந்திய குடிமகன் குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்."

மேலும் உறுதிமொழியில், "பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். குடும்பங்களில் முதியோர்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் இளம் வயதிலேயே ஏற்படுத்த இந்த உறுதிமொழி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 15 அன்று இந்த உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...