சூலூர் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்; போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கபட்டனர்.


கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...