பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், ரயில் நிலைய வளாகம், பார்சல் புக்கிங் பிரிவு, நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளர்களின் ஓய்வறைகள் மற்றும் பயணிகள் காத்திருப்போர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பலகைகளை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...