“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் “மே கார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி கோவையில் தொடங்கியது.


கோவை:

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மே கார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது.



மே 14 முதல் 16, 2026 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நவீன பல் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.



மேலும், ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிப்பதற்கான வழிமுறைகள், வாய்வழி சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் பல் பராமரிப்பு குறித்த பல்வேறு தகவல்களை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெ. தினகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



“மே கார்னிவல் 2026” நிகழ்ச்சியில் வாய்நல விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பல் சிகிச்சை கண்காட்சிகள், கல்வி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு விளையாட்டுகள் மற்றும் சரியான பல்துலக்கும் முறைகள் குறித்த நேரடி விளக்கங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், நிகழ்ச்சியில் பதிவு செய்யும் பொதுமக்களுக்கு இலவச பல் மருத்துவ வெளிநோயாளர் பதிவு அட்டையும், குறிப்பிட்ட பல் சிகிச்சைகளுக்கு மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 20 சதவீத சிறப்பு சலுகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...