குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட்டில் இருந்து குறிச்சி குளத்திற்கு செல்லும் 3.27 கி.மீ நீளமுள்ள கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.


Coimbatore: மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.






தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி,கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






அந்த வகையில், நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் புட்டுவிக்கி சாலையில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.






மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 3.27 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.




இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் விசாலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...