உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: இன்று மே 12, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை போற்றும் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.



அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...