மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்பு மூலம் நிதி பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறும் போது, தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சந்தையில் தமிழ்நாட்டை விட 10போட்டி மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளது எனவே தொழில் முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கையான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.



15 ஆண்டுகளாக புதிய தொழில் கொள்கை வகுக்கப்படவில்லை எனவே தமிழக தொழில் நலனை கருத்தில் கொண்டு விரைவாக தொழில் கொள்கை வகுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கு மேல் கடந்த காலங்களில் காணப்பட்டது போல மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிப்பதை தவிர்த்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி, மானியம் மற்றும் பிற சலுகைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா ஆகியோர் கூறும்போது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இலவசமாக 200 யூனிட் வரை மின்சாரம் வழங்குவதால் அவற்றை முழுமையாக பயன்படுத்த உதவும் வகையில் ஒரு பர்னர் அல்லது இரண்டு பர்னர் கொண்ட இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எலக்ட்ரிக் குக்கர் இணைந்து உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதனால் உள்ளூர் தொழில் வளரும். அதேபோல் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் இலவசமாக வழங்குவதற்கு பதில் ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டு30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரம், சிறுதானியங்கள் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட வீட்டிலிருந்தே சிறிய அளவில் தொழில் செய்து சம்பாதித்துக் கொள்ள தேவையான உபகரணங்களை பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படும் தொகையை தமிழக அரசு குறிப்பிட்ட வங்கிகளுக்கு செலுத்தலாம். இதன் மூலம் பெண்களுக்கு இலவசமாக பணம் வழங்குவதற்கு மாற்றாக அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் சுயமாக சம்பாதித்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளவும் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...