ப்ளஸ்-2 பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளிகளில் 91.80 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2206 மாணவ, மாணவியர்களில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 91.80 தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2206 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியிடப்பட்டன. இதில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.94, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.03. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதத்தைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடந்து வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.82 தேர்ச்சி சதவீதமும், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.55 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி 97.74 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.20 தேர்ச்சி சதவீதமும், இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.79 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளன.

மேலும், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 95.29 தேர்ச்சி சதவீதமும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.53 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.45 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 90.22 தேர்ச்சி சதவீதமும், சித்தாபுதூர் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 89.47 தேர்ச்சி சதவீதமும், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 88.69 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளது.

இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 85.63 தேர்ச்சி சதவீதமும், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 84.51 தேர்ச்சி சதவீதமும், இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 80.56 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 69.72 தேர்ச்சி சதவீதமும் ஆகமொத்தம் 16 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்குப் பதிவியலில் 9 மாணவ, மாணவியர்களும், வணிகவியலில் 38 மாணவ, மாணவியர்களும், பொருளியலில் 4 மாணவ, மாணவியர்களும், வணிக கணிதத்தில் 2 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 53 மாணவ, மாணவியர்கள் முழு மதிப்பெண்ணான 200-க்கு 200 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 19 மாணவ, மாணவியர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...