துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: துடியலூர் அரவான் திடல் பகுதியில், மத்திய அரசின் அஞ்சலகம் எதிரில் திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோதா நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



இதில், துடியலூர் திமுக அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்து, கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சலகம் முன்பு திரண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...