கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வெற்றிக்காக குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.



இன்று, வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், வடக்கு தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வானதி சீனிவாசன் மேற்கொண்ட மக்கள் பணிகளை எடுத்துரைத்து, மீண்டும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



வாக்கு சேகரிப்பின் போது, அவர்களதுகுறைகளையும் கேட்டறிந்த அவர், “வானதி விரைவில் குணமடைந்து உங்கள் சேவையைத் தொடருவார்” என உறுதி அளித்தார்.



மறுபுறம், வானதி சீனிவாசனின் மகன்களான ஆகாஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் இளைஞர் அணியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.



வேட்பாளர் நேரடியாக களத்தில் இருக்க முடியாத சூழலில், அவரது கணவரும் மகன்களும் இணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பி வருவது பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...