கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் நினைவுநாளும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட P.N.புதூரில் மார்ச் 22 அன்று விடுதலை போராட்ட மாவீரர்களின் நினைவுநாள் அனுசரிப்பு நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக விடுதலை போராட்ட இளம் வீரர்களான தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கொண்டாடப்பட்டது.







நிகழ்ச்சியில் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. P.N.புதூர் கிளை விதாத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த தோழர் வே.கௌதம்குமார் கடந்த ஆண்டு (2024) மார்ச் 23 அன்று சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.







விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளிலேயே பிறந்து, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளிலேயே இறந்த தோழர் கௌதம்குமார் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...