கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒரு மாத போனஸ் கோரி காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் கோரி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் இன்று (அக்.16) ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டமைப்பில் உள்ள தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ள அவர்கள் அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.



இது குறித்து பேசிய தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு 2000 ரூபாய் தான் போனஸ் என்று கூறி தருவதாகவும் இது எப்படி போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர். ஒரு மாத சம்பளத்தை தங்களுக்கு போனசாக வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தங்களுக்கு யாசகம் போடுவதைப் போல் அந்த தொகையை தருவதாக வேதனை தெரிவித்தனர்.

வருடா வருடம் தீபாவளி வரும் பொழுதெல்லாம் ஒப்பந்ததாரர்கள் மாறி விடுவதாகவும், இதனால் தங்களுக்கு போனஸ் முறையாக வருவதில்லை என்றனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒப்பந்ததாரர்களுக்கு கூறுவதாக தெரிவித்த அவர்கள், எப்படி இவ்வளவு பெரிய மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடும் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஹோட்டலில் பணிபுரிபவர்களுக்கு கூட ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்குகிறார்கள் எனவும், ஆனால் தூய்மை பணி செய்யும் தங்களுக்கு வெறும் 2000 அல்லது 2500 ரூபாய் தான் போனஸ் என்று கூறி வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் கொரோனா காலத்தில் அரசு வழங்குவதாக அறிவித்த தொகையையும் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...