பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல சதி முறியடிப்பு - வங்கதேச குற்றவாளிகள் கைது

கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கடுமையாக எதிர்த்து போராடியவர் முருகானந்தம். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.

கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரிலும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைகளை செய்த இந்தக் கும்பல், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த தகவல் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...