சர்வதேச காராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஆஸ்திரியாவில் நடைபெற்ற 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு சரவணம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கோஜுரியோ கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்கள், ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரியாவில் நடந்த 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 26 நாடுகளில் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி சார்பில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே, குழு என வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், சுனில், நந்தகுமார், ஆகாஷ், மஹா கவுரி ஆகிய ஐந்து பேரும் தலா ஒரு வெண்கலப் பதக்கமும், தார்ணீஷ் என்ற மாணவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கராத்தே சாம்பியன்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏசியன் கராத்தே அகாடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பகுதி செயலாளர் சிரவை சிவா, பார்த்திபன், பாஸ்கரன், சென்செய் ஆர்.முத்துராஜு, ஹென்றி சுரேஷ், சென்செய் பிரமோஷ், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், ஷிஹான் டி.முத்தையா, சுகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...