சூலூரில் திடீர் வாகன சோதனை: 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிப்பு

கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 4) இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...