கோவை: கள்ளிமடை, கதிர்நாயக்கன்பாளையம், அரசூர் பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் கள்ளிமடை, கதிர்நாயக்கன்பாளையம், அரசூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்டோபர் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும்.


Coimbatore: கோவையில் மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (அக்டோபர் 4) பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபளையம், டீச்சர்ஸ் காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், குமராபுரம், கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், பாம்பே நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...