கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையன் ஆசார் அலியின் கால் அகற்றப்படுகிறது

நாமக்கல் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலியின் கால் அழுகி வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் அகற்றப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளைக் குற்றவாளி ஆசார் அலியின் வலது கால் அகற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கன்டெய்னரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசார் அலி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு ஆசார் அலியின் கால் அழுகத் தொடங்கியது. இதனால் அவரது வலது கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது. கொள்ளையர்கள் சுமார் 66 லட்சம் ரூபாயை கன்டெய்னர் லாரியில் கடத்திச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தப்பியோடினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆசார் அலி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தனிப்படை விரைந்து வருவதால், சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...