அன்னூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பெண் ஆசிரியை போக்சோவில் கைது

கோவை மாவட்டம் அன்னூரில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சௌந்தர்யா என்ற பெண் ஆசிரியை, அந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நடந்து கொண்டதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரிடம் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கை மற்றும் தவறான தொடுதல் போன்ற முறையில் அத்துமீறியதாக தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனடியாக செயல்பட்ட பெற்றோர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அத்துமீறிய பள்ளி ஆசிரியை சௌந்தர்யா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


நாளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்புக்கு பெண்ணே அச்சுறுத்தலாக மாறிய இந்த சம்பவம் அன்னூர் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...