மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்காததை எதிர்த்து பணி புறக்கணிப்பு மற்றும் கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஒப்பந்ததாரரை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் பணிகளைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காததோடு, பிஎஃப், இஎஸ்ஐ போன்ற சலுகைகளுக்கான பிடித்தங்களை முறையாக செலுத்தாமல் ஒப்பந்ததாரர் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வி.சி.க மாவட்ட செயலாளர் தொல்குடி மைந்தன் தலைமையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் ஊர்வலம் நடத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையாக ஊதியம் வழங்குவதோடு, பிடித்தம் செய்யப்பட்ட பி.எப், இ.எஸ்.ஐ தொகைகளை உரிய முறையில் செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...