தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களுக்கு எஃப் பட்டா கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமை வகித்தார்.

போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த மனுவில், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு உபரி நிலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரின் உத்தரவின்படி, காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும், வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலங்களை விவசாயம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலங்களை அளவீடு செய்து, விவசாயம் செய்வதற்கான எஃப் பட்டா நகல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...