தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர். துணைவேந்தர், முன்னாள் ஐஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் பதவியில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1986 ஆம் ஆண்டு இளநிலை வேளாண்மை அறிவியல் பயின்ற வேளாண் மாணவர்கள் 38 வருடங்களுக்கு பிறகு இன்று (21.09.2024) பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இம்முன்னாள் மாணவர்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ கீதாலட்சுமி, முன்னாள் ஐஜி பெரியய்யா, பல்கலைக்கழக முதன்மையர் (மாணவர் நலம்) முனைவர் நா.மரகதம் மற்றும் பல்வேறு முதன்மை வங்கிகளின் அதிகாரிகள், கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், உர கண்காணிப்பு அதிகாரி என பல்வேறு துறைகளின் உயர் பதவிகளில் இருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தினை தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தனர். மேலும், தங்களது தொழில் முன்னேற்றங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்வு, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும், அதன் முன்னாள் மாணவர்களின் சாதனைகளையும் எடுத்துக்காட்டியது. இது போன்ற சந்திப்புகள் முன்னாள் மாணவர்களுக்கிடையே நெருக்கமான உறவை வளர்ப்பதோடு, எதிர்கால மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...