கோவை மாநகராட்சி ஆணையாளர் சிங்காநல்லூரில் சிறப்பு தூய்மைப்பணியை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர், கள்ளிமடை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியை (Mass Cleaning) 21.09.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர், கள்ளிமடை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (21.09.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த வகையில், இன்று கிழக்கு மண்டலம் வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர், கள்ளிமடை, கிருஷ்ணாபுரம் லே-அவுட், திருச்சி பிரதான சாலை, விநாயகர் கோவில் வீதி, ராஜாவீதி, நடுவீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது.



இந்த சிறப்பு தூய்மைப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், மற்றும் களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், நகர்நல அலுவலர் Dr. K. பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகேஷ்வரி, பாக்கியம், சுமித்ரா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...