தமிழகம் இந்தியாவின் போதை தலைநகரம் - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் சாலை திறப்பு விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகம் போதையில் தத்தளிக்கும் மாநிலமாகவும் இந்தியாவின் போதையின் தலைநகரமாகவும் விளங்குவதாக குற்றம்சாட்டினார்.



கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கிபாளையம் பகுதியில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டினார்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.



"இந்தியாவின் போதையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் போதையில் தத்தளித்து கொண்டிருக்கிறது," என்று ஜெயராமன் குற்றம்சாட்டினார். அண்மையில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், மாவடப்பு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், ஆனைமலை அருகே செம்மனாபதி பகுதியில் 3000 லிட்டருக்கும் மேலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.

பொள்ளாச்சியின் பல பகுதிகளில் கள்ளச்சாராயமும் போதை பொருட்களும் தாராளமாக கிடைப்பதாக கூறிய ஜெயராமன், இதனை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இலங்கைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய ஜெயராமன், "காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா அல்லது கடத்தல்காரர்களுக்கு துணை போகிறதா?" என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் கருத்து தெரிவித்த ஜெயராமன், "கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வளர்த்து வரும் வேலுமணியை பொறுக்க முடியாமல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு வெளியே வருவார்," என்றார்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...