மிலாது நபி விழா: 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவையில் மிலாது நபி விழாவையொட்டி 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.



கோவை: கோவை மாநகரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இறைத்தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.



இதனையொட்டி, பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்த மாபெரும் உணவு தயாரிப்பிற்காக 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோவுக்கும் அதிகமான பிரியாணி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



மேலும், டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.



250 பெரிய அளவிலான பாத்திரங்களில் 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க உள்ளனர். இதற்கு முன்னதாக, மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...