கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் முப்பெரும் விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் 2ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.



மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



அதன்பின்னர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அருள்மிகு வரசித்தி விநாயகர், மூஷிக வாகனம், விசாலாட்சி அம்பிக்கை சமேத விஸ்வநாதர், நந்தியம் பெருமான், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமண்யர் சுவாமிகளுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசங்கள் சாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மேலும் வான வேடிக்கை நிகழ்ச்சியும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகக்குழு செய்திருந்தது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...