பொள்ளாச்சி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உண்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உண்ட 6 குழந்தைகள் வாந்தியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி. அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பு.



Coimbatore: பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உணவை உண்ட 6 குழந்தைகள் வாந்தி எடுத்ததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அங்கன்வாடி மையத்தில் நிதின் மற்றும் மிதுன் கிருஷ்ணா ஆகிய இரு குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்த வந்த தன்ஷிகா, சுஜை, தேவபிரசாத், புகழ்மதி ஆகிய குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகியோர் மதிய உணவை வழங்கியுள்ளனர்.



உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே சிறிதளவு உணவை உட்கொண்டிருந்தனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது.

பதறிய பணியாளர்கள் உடனடியாக பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை நான்கு மணி நேரம் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, அங்கன்வாடி மையத்தில் பணியில் இருந்த சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நெகமம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...