காட்டு யானை தாக்கியதில் நடைப்பயிற்சி செல்லும் நபர் படுகாயம்: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை மாவட்டம் காளையனூர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கணேசன் என்பவரை காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தார். காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மருதமலை, ஓணாப்பாளையம், தாளியூர், கெம்பனூர், வண்டிக்காரனூர், குப்பேபாளையம், விராலியூர், ஆலாந்துறை, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாகவும், குட்டிகளுடனும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன.

முன்னர் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னங்குருத்து, பாக்கு, அரசாணிக்காய், தக்காளி, சோளக்கதிர் போன்றவற்றை உண்டும், மிதித்தும் நாசம் செய்து வந்த யானைகள், தற்போது விளைநிலங்களைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், கிராமங்களுக்குள் நுழைந்து வீதிகளில் உலா வருகின்றன. மேலும் ரேஷன் கடையில் உள்ள அரிசிகளை குறி வைத்து நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று (செப்டம்பர் 10) இரவு தடாகம் அருகே காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஒற்றைக் காட்டு யானை மீண்டும் அங்கு திரும்பியது. பின்னர் மீண்டும் வனத்துறையினர் அதனை விரட்டினர்.

இன்று (செப்டம்பர் 11) அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் நடைப்பயிற்சிக்கு சென்ற கணேசன் என்பவரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரது கை உடைந்தது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் கண்காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, அந்த யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...