விநாயகர் சதுர்த்தி: கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு

கோவையில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர். பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லி, செவ்வந்தி, ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் அலங்காரத்திற்கான பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி, 800 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

செவ்வந்தி பூ கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ரோஜா பூக்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன.



விநாயகர் அலங்காரத்துக்கு தேவைப்படும் தென்னை குருத்து தோரணம், மா இலை தோரணம், எருக்கம் பூ மாலை உள்ளிட்ட பூஜை மலர் மற்றும் தோரணங்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன.



சந்தைகளில் பூக்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதனால், பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் குவிந்திருக்கின்றனர்.



விலை உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்பதனால், பூ வாங்க வேண்டும் என தெரிவித்த பெண்கள், ரோஜா, செவ்வந்தி மல்லி போன்ற பூக்களை வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...