விநாயகர் சதுர்த்திக்கு சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் சேவை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 6 அன்று சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்குகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் சேவை வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த பயணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை முதல் சென்னைக்கு திரும்பி வரவும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 06151 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் இடையேயான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 06 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு கோவை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக ரயில் எண் 06152 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான சூப்பர்பாஸ்ட் விழாக்கால சிறப்பு ரயில், கோவையில் இருந்து செப்டம்பர் 08 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 07.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

இந்த ரயில்களில் ஒரு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி டூ டயர் கோச், 2 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

சென்னை - கோவை இடையேயான இந்த ரயில், சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் போது, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கோவைக்கு செல்லும். கோவையில் இருந்து புறப்படும் போது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் (சென்னை) ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுவிட்டு, சென்னை சென்ட்ரலுக்கு வரும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...