கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு

கோவை அரசு கலைக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக்குழு 2023 முதல் 2027 வரை தன்னாட்சி அதிகாரத்தை நீட்டித்துள்ளது. கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்ததையடுத்து, ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையின் மிகப் பழமையான கல்வி நிறுவனமான அரசு கலைக்கல்லூரிக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1852ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது. இக்கல்லூரி 1987ம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இயங்கி வருகிறது. கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்கலை கழக மானியக் குழுவால் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கலைக்கல்லூரியின் தன்னாட்சி அதிகாரம் 2023ம் கல்வியாண்டில் முடிவுற்ற நிலையில், கல்லூரி நிர்வாகம் தன்னாட்சி நீட்டிப்பு வேண்டி பல்கலைக்கழக மானிய குழுவிடம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்தது. கல்லூரியின் தன்னாட்சி சார்ந்த பணிகளை ஆய்வு செய்த பல்கலைக்கழக மானியக்குழு, 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு முடிய மேலும் ஐந்தாண்டுகளுக்கு அரசு கலைக்கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை நீட்டித்து ஆணையிட்டுள்ளது.

தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் செல்வராஜ், பேராசிரியர்கள், நிதியாளர் மற்றும் அனைத்து பணியாளர்களும் பூங்கொத்து அளித்து முதல்வர் முனைவர் எழிலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...